AD

நாகேஷ் என்னும் நாயகனின் நினைவு தினம் !!

பழம்பெரும் நகைச்சுவை நடிகர் நாகேஷின் 10 ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.  இவர் நகைச்சுவை மன்னர் என்றும் அழைக்கப்பட்டார்.  நாகேஷ்க்கு நாகேஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் கன்னட பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். தமிழ்நாட்டில் தாராபுரம் பகுதியில் கன்னட மாதவர்கள் வாழும் கொழிஞ்சிவாடி என்ற ஊரில் பிறந்தார்.

இவரது தந்தை பெயர் கிருஷ்ணாராவ் மற்றும் தாயார் பெயர் ருக்மணி அம்மாள். நாகேஷ் வீட்டில் குண்டப்பா என்றும் நண்பர்களால் குண்டுராவ் என்றும் செல்லமாக  அழைக்கப்பட்டார்.  இவர் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது அம்மை நோய் வந்ததால் இவரது முகத்தில் தழும்புகள் உண்டாயின. நாகேஷ் கல்லூரிப் படிப்பு முடித்ததோடு , ரெயில்வேயில் எழுத்தாளராகவும் பணிபுரிந்தார்.

சிறுவயதில் இருந்தே நடிப்பில்  மீது அதிக ஆர்வம் கொண்ட நாகேஷ் பல நாடகங்களில் நடித்து வந்தார். 1959ஆம் ஆண்டில் திரைப்படத்துறையில் புகுந்தார். தாமரைக்குளம் என்ற திரைப்படத்தில் முதன் முதலாக நடித்தார். அதன் பின்னர் சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.
ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் முக்கிய நகைச்சுவைப் பாத்திரத்தில் தோன்றினார். இதில் இவர் ஒரு சினிமா படம் எடுக்கும் தீராத  ஆசை கொண்ட டைரக்டர் வேடம் கொண்டு நடித்து தன் தந்தையிடமே திகில் கதை சொல்லும் காட்சி அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தியது.  நாகேஷ் என்று சொன்னாலே நினைவுக்கு வருவது மனோராமா ஆச்சி தான், இவர்கள் இரண்டு பேரும் ஒன்றாக நடித்த பல படங்கள் மறக்க முடியாது தான்! இவர் 1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்தவர் என்ற பெருமைக்குரியவர்.

2009-ம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு,  மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை பலனின்றி தனது 75 ஆவது வயதில் இறந்தார்.  பழம் பெரும் நகைச்சுவை நடிகர் நாகேஷ் மறைந்த தினம் இன்று என்பது குறிப்பிடத்தக்கது.