AD

விஸ்வாசம் திரைப்படத்தின் 50 நாட்கள் வெற்றியை அடுத்து 100 பேருக்கு சேலை வழங்கி கொண்டாட்டம்


திருப்பூர் மாவட்ட அஜித் ரசிகர் மன்றத்தின் முன்னாள் தலைவர் ரமேஷ் தலைமையில் அஜித் நடித்த விஸ்வாசம் திரைப்படத்தின் வெற்றி கொண்டாடப்பட்டது.

திருப்பூர் ஸ்ரீ சக்தி தியேட்டரில் நடந்த இந்தக் கொண்டாட்டத்தில்
பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் பொது மக்களுக்கு வழங்கினார்கள். தொடர்ந்து 100 பெண்களுக்கு சேலை இலவசமாக வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தியேட்டர் உரிமையாளர் சக்தி பிலிம்ஸ் சுப்பிரமணியத்தின் வசம் வெற்றி விழா கேடயம் வழங்கப்பட்டது. நிகழ்வில் பெருந்திரளான அஜித் ரசிகர்கள் பங்கேற்றனர்.