AD

"இவர் நம்பர்-1 மோசமானவர், காமசூத்ராவின் பாஸ்" - ஸ்ரீரெட்டி


பல தெலுங்கு சினிமா பிரபலங்கள் மற்றும் தமிழ் சினிமா பிரபலங்கள் மீது சென்ற வருடம் பாலியல் குற்றச்சாட்டு மற்றும் புகார்களை கூறியவர் ஸ்ரீரெட்டி.

அதன் பிறகு அவர் ராகவா லாரன்ஸ் உட்பட சில தமிழ் சினிமாத்துறை நட்சத்திரங்கள் மீதும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இருந்தார். அதன் பின் லாரன்ஸ் அவருக்கு தன் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்.


சில மாதங்கள் யார் மீதும் புகார் கூறாமல் இருந்த ஸ்ரீரெட்டி தற்போது மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார்., தற்பொழுது முன்னணி தெலுங்கு இயக்குனர் கொரடாலா சிவா மீது தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் தான் அவர் பாலியல் புகார்கூறியுள்ளார்.

"இவர் நம்பர்-1 மோசமானவர், காமசூத்ராவின் பாஸ்" என்று ஸ்ரீரெட்டி கூறியுள்ளார். மேலும் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தையும் பெயர் குறிப்பிடாமல் வெளியிட்டுள்ளார்.