AD

குடித்துவிட்டு காரை ஓட்டிய பிக்பாஸ் புகழ் ஷக்தி- நடுரோட்டில் வேட்டி விழுந்தது கூட தெரியாமல் தடுமாறிய நடிகரின் வீடியோ

பிரபல இயக்குனர் பி.வாசுவின் மகன், பிக்பாஸ் பிரபலம் என பல அடையாளங்கள் மூலம் அறியப்படுபவர் ஷக்தி. இவர் நடித்த ஒரு படம் கூட சரியான வரவேற்பை பெறவில்லை என்பது உண்மை.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சினிமாவில் ஒரு வலம் வருவார் என்று பார்த்தால் அதுவும் இல்லை. இந்த நேரத்தில் தான் அவரை பற்றி ஒரு தகவல், அதை நாம் இதற்கு முன்பே நமது முந்தைய பதிவில் அறிவித்திருந்தோம். அதாவது அவர் குடித்துவிட்டு காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியுள்ளார்.

இதற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டு பின் விடுதலை ஆகியுள்ளார். இந்த நேரத்தில் அவர் கார் ஓட்டிய போது எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அதில் அவர் காரின் வெளியே வந்து அப்படியே நடுரோட்டில் விழுகிறார், அங்கு இருந்தவர்கள் அவரை காப்பாற்றுகிறார்கள். இதோ அந்த வீடியோ,