AD

தளபதியின் உண்மையை கூறிய நகைச்சுவை நடிகர்!!


நகைச்சுவைநடிகர் சுவாமிநாதன் தளபதி விஜயை பற்றி ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார். இவர் தளபதி விஜய்யுடன் வேலாயுதம் படத்தில் நடித்துள்ளார். தளபதி விஜய்யை படப்பிடிப்பு தளத்தில் நான் சந்திக்க சென்றபோது தளபதி அமைதியானவர் நீங்கள் நேரடியாக அவரை சந்திக்க முடியாது என்று அங்கு இருந்த சிலர் என்னை தடுத்தனர்.

ஆனால் எதிர்பாராதவிதமாக நான் இருந்த இடத்திற்கு தளபதி விஜய்யே வந்தார். அவர் என்னை பார்த்தபோது நான் பயந்துகொண்டே வணக்கம் சொன்னேன். அதற்க்கு பிறகு தளபதி விஜய்யும் என்னக்கு வணக்கம் சொன்னதோடு என் குடும்பத்தை பற்றி விசாரித்தார்.

அவரை சுற்றியிருப்பவர்கள் தான் அவரை பற்றி தவறான கருத்தை பரப்புகிறார்கள் என்று அப்போது நினைத்தேன். என் மகன் உங்கள் ரசிகன் என்றேன், ஓ அப்படியா என்றார். எனது மகள் அஜித் பேன் என்றேன், ஆ இருக்கட்டும் இருக்கட்டும் என்றார்.