AD

ரஜினி-முருகதாஸ் படத்தின் பெயர் இதுதான்? இதிலும் சர்கார் கனெக்‌ஷன்


சூப்பர்ஸ்டார் ரஜினியின் பேட்ட இன்னும் சில தினங்களில் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகவுள்ளது. மேலும் அடுத்து அவர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், தற்போது முருகதாஸ் இந்த படத்திற்கு நாற்காலி என பெயர் வைத்திருப்பதாக தகவல் பரவி வருகிறது.

அரசியலில் அனைவரும் முதல்வர் நாற்காலிக்காக போட்டிபோடுவதை இது குறிப்பதாக கூறப்படுகிறது. இதுவும் சர்கார் போல அரசியல் படமா என்கிற எதிர்பார்ப்பையும் இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.