AD

லாஸ்லியாவுடன் திரைப்படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்

பிக்பாஸ் சீசன் 3 தொடரின் மூலம் தமிழக மக்களிடம் மிகவும் பிரபலமானவர் லாஸ்லியா. இலங்கையில் செய்திவாசிப்பாளராக இருந்த இவர் இந்த பிக்பாஸ் தொடரின் மூலம் பல இளைஞர்களின் கனவுக்கன்னியாக மாறிவிட்டார்.

இந்நிலையில் லாஸ்லியா ஹர்பஜன் நடிக்கும் படத்திலும், ஆரி நடிக்கும் படத்திலும் ஹீரோயினாக நடித்து வருகிறார். இதில் ஆரி நடிக்கும் படத்தில் மற்றுமொரு கதாநாயகியாக ஸ்ருஷ்டி டாங்கே நடிக்கின்ற நிலையில் ஆல்பர்ட் ராஜா இந்த படத்தை இயக்குகிறார்.சத்யா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.சந்திரா மீடியா விஷன் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.

இவ்வாறு இருக்க தற்போது இந்த படத்தில் பிக்பாஸ் தொடரின் மூலம் பிரபலமான அபிராமி வெங்கடாச்சலம் நடிக்கிறார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.