AD

உணவு சம்பளமே இல்லாமல் வேலை செய்கிறேன் பிரபல நடிகர் பதிவு

ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானவர் நடிகர் நகுல். இவர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். மேலும், நகுல் அவர்கள் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல், பின்னணி பாடகரும் ஆவார். 

இவர் பல படங்களுக்கு பாடல்களை பாடியுள்ளார். குறிப்பாக விக்ரம் நடிப்பில் வந்த அந்நியன் படத்தில் காதல் யானை என்ற பாடலை இவர் தான் பாடியது.  பின் இவருக்கு பெரிதாக சினிமாவில் பட வாய்ப்புகள் அமையாததால் தற்போது நகுல் அவர்கள் சின்னத்திரை நோக்கியும் பயணம் செய்து வருகிற நிலையில் இதனை தொடர்ந்து  நடிகர் நகுல் அவர்கள் சுருதி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

நகுல் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் ஒருவர். அடிக்கடி இவர் தன் மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வரும் நிலையில் நடிகர் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டிரைவர் கெட்டப்பில் தன் மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். 

அதில் அவர் கூறியிருப்பது, 

என் மனைவிக்கு கார் டிரைவர் ஆகிவிட்டேன். சம்பளம் இல்லை, இது அடிமைத்தனம், சாப்பாடு இல்லை, நல்ல உடை இல்லை, மோசமான பாஸ், நம்புங்க என கிண்டலாக பதிவிட்டுள்ளார். இவர் இப்படி வேடிக்கை தனமாக பதிவிட்ட கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.