தந்தையின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்கும் பிரபலம்
மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியினால் ‘கலையரசி’ என்று பட்டம் சூட்டப்பட்ட நடிகை ராதிகா சரத்குமார் 43 வருடங்களாக நடித்துக் கொண்டிருக்கிறார். இதுவரை 5 மொழிகளில் 375 படங்களில் நடித்து இருக்கிறார்.
இந்நிலையில் இவருடைய 375-வது படம் மணிரத்னத்தின் இயக்கத்தில் வானம் கொட்டட்டும் என்ற தலைப்பில் உருவாகிவருகிறது. இந்த திரைப்படம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் திரையிடப்பட இருக்கும் நிலையில் ராதிகா தனது தந்தையான எம்.ஆர். ராதாவின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Post a Comment