AD

6 நாட்களில் 100 கோடி வசூல் - தன்ஹாஜி

அஜய் தேவ்கன் நடிப்பில் வெளியான தன்ஹாஜி திரைப்படம்  100 கோடி ரூபாய் வரையில் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஓம் ராவுத் இயக்கத்தில் கஜோல் கதாநாயகியாக நடித்துள்ள அஜய் தேவ்கன் நடிப்பில் ஜனவரி 10-ஆம் திகதி  வெளியான இந்த திரைப்படம், மராத்திய அரசர் சத்ரபதி சிவாஜி மஹராஜின் படையில் இராணுவ தளபதியாக இருந்த தன்ஹாஜி மலுசாரேவின் வாழ்க்கை வரலாற்றை பின்புலமாக கொண்டு  எடுக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படம் வெளியான  முதல் மூன்று நாட்களிலேயே 61.93 கோடி ரூபாய் வசூலித்துள்ளதனை தொடர்ந்து இன்றைய நிலைவரப்படி 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.