AD

தலைவர் படத்தின் நாயகி மீனா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள 168 வது திரைப்படமான 'தலைவர் 168' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்க இருந்த நிலையில் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஒரு முன்னணி நடிகையும் ரஜினிக்கு மகளாக ஒரு முன்னணி நடிகையும் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகின 

இந்த நிலையில் ரஜினிக்கு ஜோடியாக மீனா நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்த போதிலும் இன்னும் அதிகாரபூர்வமாக இது குறித்த அறிவிப்பு வெளிவரவில்லை.  ஆனால் படத்தில்  ரஜினிக்கு மகளாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.