AD

பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்த காதல் ஆண்ட்ரியா

பிரபல நடிகையும் பின்னணி பாடகியுமான ஆண்ட்ரியா, தன்னை குறித்து வெளியாகிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இவர் ஒரு அரசியல் வாதியை காதலித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் பல கருத்துக்கள் வெளியாகியிருந்தன. இது குறித்து விளக்கமளித்துள்ள அண்ட்ரியா, புத்தகத்தில் உள்ள ஒரு கவிதையை நான் படித்தேன். அப்போது அது எதை பற்றியது என கேட்டார்கள்.  நான் என்னுடைய மோசமான ஒரு காதல் குறித்தது என கூறினேன் 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த காதல் அது 10 வருடம் முன்பு தான் அந்த கவிதையை எழுதினேன்.

ஆனால் அதன் பிறகு நான் பேசியதாக பல்வேறு தவறான செய்திகள் கிளம்பி விட்டது. இதை எல்லாம் பார்த்து எனக்கு கோபம் தான் வந்தது. நடிகர், அரசியல்வாதி என்றெல்லாம் சொல்கிறார்கள். கட்டுக் கதை போல ஒரு வி‌ஷயத்தை கிளப்பி விட்டுள்ளார்கள். அதற்கு எப்படி விளக்கம் அளிப்பது? அதனால் அமைதியாக இருந்து விட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.