AD

மாநாடு நடத்தாமல் போனதுக்கு ரெக்கார்ட் உள்ளது..



'மாநாடு' படத்திலிருந்து சிம்பு நீக்கம் என்று அறிவித்து உள்ளனர். ஏற்கெனவே சுரேஷ் காமாட்சியிடம் மாநாடு' ஷூட்டிங் தள்ளிக்கொண்டே போவதற்கான காரணம் , 'மலேசியாவில் ஷூட்டிங் நடத்த அரசாங்க அனுமதிக்காக அலைந்து கொண்டிருப்பது என தெரிவிக்கப்பட்டது. இப்போது சிம்பு நீக்கம் குறித்து அறிக்கை வெளியிட, அதற்கு என்ன பதில் என்று கேட்ட போது,

``சுரேஷ் காமாட்சி கேட்ட தேதியில் கால்ஷீட் கொடுத்துவிட்டு காத்திருந்தார் சிம்பு. ஷூட்டிங் நடத்துவதற்குத் தயாரிப்பாளருக்கு பைனான்ஸ் பிரச்னை ஏற்பட்டதால் படப்பிடிப்பு தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. கடந்த 2 மாதமாக 'மாநாடு' படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியாததால் வெறுத்துப்போய் வெளிநாட்டுக்குப் போய்விட்டார். சிம்பு கால்ஷீட் கொடுத்தது, படப்பிடிப்பு நடத்தாமல் போனது எல்லாவற்றுக்கும்  ஆதாரமாக ரெக்காட் வைத்து இருக்கிறார், சிம்புவின் அம்மா உஷா. சிம்புவின் வளர்ச்சியைத் தடுப்பதற்கு ஒரு கும்பல் மாஃபியா மாதிரி கிளம்பி சதி செய்துகொண்டிருக்கிறது.

முதலில் முறைப்படி சனி, ஞாயிறு படப்பிடிப்பில் கலந்துகொள்ள மாட்டார் என்று கால்ஷீட் ஒப்பந்தத்திலேயே இருக்கிறது. இப்போது திடீரென்று 'சிம்பு என்ன ஸ்கூல் பையனா... சனி, ஞாயிறு லீவு கேட்கிறார்' என்று கிண்டல் செய்தால் என்ன அர்த்தம். அரசாங்க அதிகாரிகள், ஐ.டி நிறுவனங்கள் எல்லாமே சனி, ஞாயிறு விடுமுறை விடுகிறதே அங்கே வேலை பார்ப்பவர்கள் எல்லாம் ஸ்கூல் பையன்களா' என்பதைச் சொல்ல வேண்டும். அடுத்து சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறேன் என்று ஒப்புக்கொண்டார் சிம்பு. சுரேஷ்காமாட்சி 
ஒன்றும் ஏவி.எம், லைக்கா, ஆஸ்கார் போன்ற பெரிய சினிமா கம்பெனி வைத்து இருக்கவில்லை. முதலில் எடுத்த 'மிக மிக அவசரம்' படத்தையே ரிலீஸ் செய்யாமல் இருக்கும் அவரை, சிம்பு வளர்த்துவிட ஆசைப்பட்டு கால்ஷீட் கொடுத்தார்'' என்று விளக்கம் சொன்னார்கள்.

#Manadu #Simbu