AD

தெலுங்குப் படத்திலிருந்து விலகிய விஜய் சேதுபதி


தமிழ்த் திரையுலகத்தில் வித்தியாசமான நடிகர் எனப் பெயர் வாங்கிய விஜய் சேதுபதி, தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் 'சை ரா' படத்தின் மூலம் அங்கு அறிமுகமாக உள்ளார்.

அந்தப் படத்தை அடுத்து சிரஞ்சீவியின் சகோதரி மகன் வைஷ்ணவ் தேஜ் நாயகனாக அறிமுகமாக உள்ள 'உப்பெணா' படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். தற்போது அந்தப் படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகிவிட்டாராம். அவரே படத்திலிருந்து விலகிக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது. 

அவர் நடித்து கடைசியாக வெளிவந்த 'சூப்பர் டீலக்ஸ், சிந்துபாத்' ஆகிய படங்கள் வியாபார ரீதியாக தோல்வி அடைந்ததால் தமிழில் மட்டும் தற்போதைக்கு கவனம் செலுத்த முடிவு செய்துள்ளாராம். மலையாளத்தில் விஜய் சேதுபதி நடித்த 'மார்க்கோனி மத்தாய்' படமும் மிகப் பெரும் தோல்வி அடைந்தது.

தற்போது விஜய் சேதுபதிக்குப் பதிலாக வேறு ஒரு நடிகரைத் தேட ஆரம்பித்துள்ளார்கள்.