AD

விரைவில் புது படம் அறிவிக்கும் சமந்தா


ஓ பேபி படத்தை அடுத்து விஜய் சேதுபதி - த்ரிஷா நடித்த 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சர்வானந்துடன் நடிக்கிறார் சமந்தா. இந்த படத்தை முடித்ததும் அடுத்த ஆண்டு அவர் குழந்தை பெற்றுக்கொள்வார் என செய்தி பரவி வருகிறது. 

அந்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார் சமந்தா. அதாவது, 96 படத்திற்கு பிறகு தான் நடிக்கும் புதிய படத்தை விரைவில் அறிவிக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.

அனுஷ்காவின் பாகமதி படத்திற்கு பிறகு தான் நடித்த ஓ பேபி படம் அமெரிக்காவில் ஒரு மில்லியன் டாலர் வசூலித்ததால், நடிப்பின் மீதான தனது ஆர்வம் மிகுதியாகி விட்டது. அதனால் குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளி வைக்க முடிவு செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார் சமந்தா.