AD

சமந்தா சம்பளம் விர்ர்ர்

திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் தொடர்ச்சியாக ஹிட் படங்களை கொடுத்து வருகிறார் நடிகை சமந்தா. சமீபத்தில் வெளிவந்த ‛ஓ பேபி' படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, தனது சம்பளத்தை உயர்த்தி விட்டார்.

ரூ.2 கோடி சம்பளம் வாங்கி வந்த சமந்தா, தற்போது ரூ.3 கோடியாக உயர்த்தி விட்டாராம். தென்னிந்திய நடிகைகளில் நயன்தாரா அதிக சம்பளம் வாங்குகிறார். அதற்கு அடுத்து சமந்தா தான் என்கிறார்கள்.