AD

அஜித் பட நாயகி 2வது திருமணம்

தமிழில் அஜித் நடித்த ஆசை படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்து, சினிமாவில் அறிமுகமானவர் பாலிவுட் நடிகை பூஜா பத்ரா. அதைத்தொடர்ந்து சரத்குமாருடன் ஒருவன், மீண்டும் அஜித்துடன் 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' படத்தில் அவர் படம் இயக்கும் நாயகியாக நடித்தார். பின்னர் பாலிவுட்டுக்கு சென்று செட்டில் ஆகிவிட்ட இவர், 2002ஆம் வருடம் சோனு அலுவல்லா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

கடந்த 2011ஆம் ஆண்டு அவரிடமிருந்து விவாகரத்துப் பெற்ற பூஜா பத்ரா, சமீபத்தில் பாலிவுட் குணச்சித்திர மற்றும் வில்லன் நடிகரான நவாப் ஷா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.. 


நவாப் ஷா தமிழில் கஜேந்திரா, போஸ், யான் ஆகிய படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தவர். தற்போது முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் தர்பார் படத்தின் வில்லன்களில் ஒருவராகவும் நடித்து வருகிறார்.