AD

அட கீர்த்தி சுரேஷா இவங்க..!!!

நடிகை கீர்த்தி சுரேஷ் இவர் நடிகை மேனகாவின் மகள் ஆவார். நடிகை மேனகா சூப்பர் ஸ்டாருடன் சேர்ந்து நடித்த நெற்றி கண் அந்த காலத்தின்  வெற்றி படமாகும். கீர்த்தியும் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் டாப் கதாநாயகிகளின் ஒருவராக வலம் வருகிறார். கமர்ஷியல் ஹிட் படங்களில் நடித்து வந்த அவருக்கு நடிகை சாவித்ரியின் பயோபிக்கான நடிகையர் திலகம் புதிய பரிணாமத்தைக் கொடுத்தது. கீர்த்தி சுரேஷின் நடிப்பை அந்தப் படம் அடுத்த லெவலுக்கு எடுத்துச் சென்றது எனலாம். இதனால், தனது அடுத்த படத்தை மிகவும் கவனமாக  தேர்வு செய்து வருகிறார்.
 இதனிடையே கீர்த்தி சுரேஷ், தற்போது இந்தி படம் படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். அதனை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கிறார். இப்படத்திற்காக பாலிவுட் நடிகைகளை போன்றே கீர்த்தி சுரேஷ் ஒல்லியான உடலமைப்பிற்கு மாறிவருகிறார். அப்படி மாறியிருக்கும் புகை படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வந்தது வேறு விஷயம்.
 இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவலென்னவென்றால், கடந்த சில ஆண்டுகளாக இளைஞர்கள் மத்தியில் பிரபலம் ஆகிவரும்  டிக் டாக் செயலியிலி. அதுவும் தமிழ் சினிமாவில் நடிகர், நடிகைகள் போன்றே இருக்கும் நபர்கள் என்றாலே ஒரே நைட்டில் படு பேமஸ் ஆகிடுவார்கள்.ரஜினி முருகன் படத்தில் கீர்த்தி சுரேஷ் பேசிய வசனங்களை கீர்த்தி சுரேஷ் போலவே இருக்கும் பெண் ஒருவர் டிக் டாக் செய்துள்ள வீடியோ,  சமூக வலைதளத்தில் பெரும் வைராகி வருகிறது.
இவங்க மாதிரியே இன்னும் ஒருவரும் பிரபலம்  ஆகிறார். அவர் யார் என்றால் காயத்திரி ஷான், இவர் இலங்கையை சேர்ந்தவர், தான் ஒரு இலங்கை தமிழச்சி என்று சொல்வதில் இவருக்கு பெருமையாம். இவர் டிக் டாக் செய்துள்ள வீடியோகள் ஆகட்டும் இவர் பேசி நடிக்கும் வசனங்களும் ஆகட்டும் இவருக்கு நிகர் இவர் தான் எனலாம் அந்த அளவுக்கு கட்சிதமாக நடித்திருப்பார். இவரின் டிக் டாக் வீடியோவும் சமூக வலைதளத்தில் பெரும் வைராகி வருகிறது குறிப்பிடத்தக்கது.
#keerthySuresh #Latestnews #Kollywoodnews #Tamilcinemaking