AD

நடிகர் வாஷிங்டனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

ஆஸ்கார் விருதுகள் இரண்டை வென்ற, ஹாலிவுட் நடிகர் டென்செல் வாஷிங்டனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.

ஆப்ரிக்க, அமெரிக்க நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத் திறமை கொண்ட நடிகர் டென்செல் வாஷிங்டன் ‘தி ஈக்குவலைசர்’, ‘டிரெய்னிங் டே’, ‘பிளைட்’ உள்ளிட்ட பல ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார்.

இவரது சிறந்த நடிப்புக்கு இரு கோல்டன் குளோப் விருதுகள் மற்றும் இரு ஆஸ்கார் விருதுகள் கிடைத்துள்ளன. இந்த நிலையில் அவரது நடிப்புத் திறனைப் பாராட்டி, அமெரிக்கத் திரைப்பட நிறுவனம் வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கியுள்ளது.

லாஸ் ஏஞ்செல்ஸில் வாஷிங்டனுடனுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஜோடி போஸ்டர், ஜூலியா ராபர்ட்ஸ், மார்கன் ப்ரீமேன் உள்ளிட்ட நட்சத்திரங்களும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


#oscars_award   #Denzel_Washington   #tamilcinemaking