AD

மறுபடியும் தளபதியுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை..!!!

அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது "தளபதி 63" என அழைப்படும்  படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்து விஜய் மாநகரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படம் "தளபதி 64" என்று அழைக்கப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் தற்போது கார்த்தியை வைத்து "கைதி" என்னும்  திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதனை தொடர்ந்து "தளபதி 64" படத்தை துவங்குவார் என தெரிகிறது. இந்த படத்தை பிவி கம்பைன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் "தளபதி 64" படத்தின் ஹிரோயின் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் ராஷ்மிகா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகின. ஆனால் இப்போது விஜய்யுடன் 5வது முறையாக திரிஷா ஜோடியாக  நடிக்க உள்ளார். இந்த படத்தில் முதல் கதாநாயகியாக திரிஷாவும் இரண்டாவது  கதாநாயகியாக ராஷ்மிகாவும் நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால், இது குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
 #Vijay #TrishaKrishnan #RashmikaMandanna Thalapathy 64 #Latestnews #Tamilcinemaking