AD

பாகிஸ்தான் சர்ச்சை வீடியோவுக்கு பிரபல நடிகை கண்டனம்..!!

உலகக் கோப்பை தொடரில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இதனால் இந்தியா - பாகிஸ்தான் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். அதன்படி  இந்தியா - பாகிஸ்தான் போட்டியை முன்னிட்டு பாகிஸ்தான் டிவி ஒரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.

அதில் இந்திய விமானப்படையின் விங் காமாண்டர் அபிநந்தனைப் போல் மீசையை வைத்துக்கொண்டு ஒருவர்  வருகிறார்.  அவரிடம் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற இந்தியாவின் யுக்தி என்ன என்று கேள்வி கேட்கப்படுகிறது. அதற்கு அவர் அது மன்னித்து விடுங்கள், அது பற்றி உங்களிடம் கூற முடியாது என்று கூறுகிறார். மேலும் இந்த விளம்பரத்தின் இறுதியில், #LetsBringTheCupHome என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.
தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்திடம் பிடிபட்ட இந்திய விமானப்படையின் விங் காமாண்டர் அபிநந்தனை டீ  அருந்துவது போல ஒரு போலி வீடியோ வெளியானது. அதை மையமாகக் கொண்டே இந்த விளம்பரம் உருவாக்கப்பட்டுள்ளதாகப் பலரும் கருத்து கூறி வருகின்றனர். அபிநந்தன் போல, நடித்தவரின் முகத்தில் கருப்பு வண்ணம் பூசப்பட்டுள்ளது நிறவெறி தாக்குதலைக் குறிக்கிறது என்று பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் கவர்ச்சிக்குப் பெயர் போன நடிகை பூனம் பாண்டே பாகிஸ்தான் விளம்பரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதற்காக அவர் ஏதோ போராட்டத்திலோ அல்லது உண்ணாவிரதத்திலோ ஈடுபட உள்ளார் என்று  தவறாக நினைக்க வேண்டாம். அவர் தனது உள்ளாடையைக் கழற்றி தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவானது தற்போது வைரலாகி வருகிறது.