AD

சாய் பல்லவி-ரகுல் ப்ரீத் சிங் மோதலா

ஒரு படத்தில் இரு ஹீரோயின்கள் நடிக்கிறார்கள் என்றால் அவர்களுக்குள் சண்டை வருமோ இல்லையோ யாராவது சண்டை என்றாவது பரப்பி விடுவார்கள். 

சூர்யா நடிக்கும் 'என்ஜிகே' படத்தில் அவரது ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் இருவரும் நடித்துள்ளார்கள். 

 பெரிய அளவில், பெயர் கிடைக்கவில்லை என்றாலும் தெலுங்கில் இருவருமே கொஞ்சம் புகழ் பெற்றவர்கள்தான். அதனால், 'என்ஜிகே' படத்தில் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் இருவருக்கும் இடையே 'ஈகோ' மோதல் ஏற்பட்டது என பரப்பி விட்டார்கள்.

 இது குறித்து, ரகுல், தெரிவித்ததாவது, “அது எல்லாம் வதந்தி தான். எனக்கும் சாய் பல்லவிக்கும் இடையில் எந்த சண்டையுமில்லை. படத்தில் என்னுடைய கதாபாத்திரத்திற்கு நல்ல முக்கியத்துவம் உள்ளது” என்று அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.


#Sai_Pallavi  #Rakul_Preet_Singh  #Suriya  #tamilcinemaking