AD

சின்ன நயன்தாராவுக்கு ஜனவரியில் டும் டும்

நயன்தாரா நடிப்பில் கடந்த மார்ச் மாதம் வெளியான படம் ஐரா. இந்த படத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருந்த நயன்தாரா, அதில் ஒரு கேரக்டரில் கருப்பான முகத்தோற்றத்துடன் நடித்திருந்தார்.

சிறுவயது நயன்தாராவாக கேப்ரில்லா செல்லஸ் என்பவர் நடித்திருந்தார். கருப்பழகி நயன்தாராவின் கதாபாத்திரத்தில் நடித்ததாலோ என்னவோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு கூட கருப்பழகி என்றே  அவர் பெயர் சூட்டியுள்ளார் 

தனது நீண்டநாள் நண்பரும் ஒளிப்பதிவாளருமான ஆகாஷ் என்பவரை கேப்ரில்லா திருமணம் செய்யவிருப்பதாக  செய்திகள் வெளியாகியதையடுத்து,
இருவருக்கும்  நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. 

புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள கேப்ரில்லா, தனது கனவு நனவானது என்றும் வரும் ஜனவரி மாதத்தில் தங்களது திருமணம் நடைபெற இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.



#Airaa  #Nayanthara  #tamilcinemaking