AD

விபத்தில் உயிர் தப்பிய பிரபல நடிகை..!!!

நடிகை ஸ்ரீ பிரியங்கா தமிழில் ஆசாமி படத்தின் மூலம் அறிமுகமானவர். இதைத் தொடர்ந்து கங்காரு, வந்தாமல, ஸ்கெட்ச், மிக மிக அவசரம் போன்ற படங்களில்  நடித்தார். இவர் நடித்த படங்கள் மக்கள் மத்தியில் கவனத்தைப் பெறவில்லை. இருப்பினும் இவர் கங்கணம் என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் ஆனைவாரி ஸ்ரீதர் இயக்கும் இப்படத்தில் கெளசிக் ஹீரோவாக  நடிக்கிறார்.

இந்நிலையில் இப்படத்திற்காக ஸ்ரீ பிரியங்கா பைக்கில் செல்லும் காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது. அதற்காக அவருக்கு முன்னால்  சென்ற காரில் கேமிராவை வைத்து படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்கான படப்பிடிப்பில் ஸ்ரீ பிரியங்கா வேகமாக பைக்கில்  செல்ல, அவருக்கு முன்னால்  சென்று கொண்டிருந்த காரை திடீரென்று நிறுத்தியுள்ளார்கள்.  இதை எதிர்பார்க்காத ஸ்ரீ பிரியங்கா வாகனத்தில் வேகமாக மோதி  சாலையில் விழுந்துள்ளார்.
இதனால் பதறிப்போன படக்குழு, ஸ்ரீ பிரியங்காவைச் சிறு காயங்களுடன் மீட்டுள்ளது. இருப்பினும் பெரிய அசம்பாவிதத்திலிருந்து தப்பித்த ஸ்ரீ பிரியங்காவுக்குக் காய்ச்சல் வந்துள்ளது. இதனால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

#SriPriyanka #IndianActress #Accident  #TamilCinemaking #Latestnews