AD

சீனாவிற்கு செல்லும் பிரபல நடிகையின் படம்...!!!!

நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை முன் வைத்து எடுத்த படம்தான் "மகாநதி". இந்த படத்தில் நடிகை சாவித்திரியின் தோற்றத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்திருப்பார். இந்த படம் தமிழில் "நடிகையர் திலகம்"  என்ற பெயரில் வெளியானது. இந்த படத்தினை நாக அஸ்வின் இயக்கி இருந்தார். இந்த படம் கடந்த மே 9 ஆம் தேதி திரையிடபட்டது.
இந்த படத்தின் நடிகை கீர்த்தியின் நடிப்பை எல்லோரும் பாராட்டினார்கள். அச்சு அசலாக சாவித்திரியாகவே மாறியிருந்தார் என சொல்லாம். இந்த படம் நடிகை கீர்த்தியின் சினிமா வாழ்வில் மிக பெரிய திருப்பு முனையாக அமைந்தது.
இந்நிலையில் இந்த படம் சீனாவில் நடைபெறவுள்ள ஷாங்காய் இன்டெர்நேஷனல் பிலிம் பெஸ்டிவலில் திரையிட உள்ளதாக அதிகார பூர்வமாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திரைப்பட  விழா வரும் ஜூன் 15 முதல் 26 வரை நடை பெறவுள்ளது. இந்த செய்தியை திரைப்பட இயக்குனர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் "சாவித்திரி படத்தை சீனாவிற்கு கொண்டு செல்கிறோம் கண்டிப்பாக அவர் பல இதயங்களை திருடி விடுவார் என்ற நம்பிக்கையோடு" என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த படம் ஏற்கனவே சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் திரையிடபட்டது. அதே போல் மெல்போர்ன் விழாவிலும் திரையிடபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

#KeerthySuresh #Savitri #NadikaiyarThilagam #Tamilcinemaking #Mahanati #China #Shanghai InternationalFilmFestival