AD

பிரபல நடிகருடன் நடிக்க மறுத்த சாய்பல்லவி..!!!

'கீதா கோவிந்தம்' பட நடிகை ராஷ்மிகா மந்தனாவிற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இவரை போலவே தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் நடித்து ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை சாய் பல்லவி.

அணில் ரவிப்புடி இயக்கத்தில், மகேஷ் பாபு நடிக்க உள்ள 26 ஆவது படத்தில் ஹீரோயினாக நடிக்க சாய்பல்லவியை அணுகிய போது, மகேஷ் பாபுவின் ரசிகர்கள் தன்னை தாறுமாறாக விமர்சித்து வருவதால் என்னால் நடிக்க முடியாது என கறாராக கூறிவிட்டாராம். இதை அறிந்த சிலர் இதலாம் ஒரு காரணமா? என சாய்பல்லவியிடம் கேள்வி எழுப்பியும் வருகிறார்கள்.
இதே போல் நடிகை ராஷ்மிக்காவும்  நடிக்க மறுத்து விட்டாராம், இவர் தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகியுள்ளதால், கால்ஷீட் இல்லை என கூறி, மகேஷ் பாபு படத்திற்கு நோ சொல்லிவிட்டாராம். இரண்டு நடிகைகளும் ஏமாற்றி விட அடுத்த நாயகியை தேடுவதில் தீவிரம் காட்டி வருகிறது படக்குழு.

#saipallavi #RashmikaMandanna #mageshbabu #tamilcinemaking #kollywoodnews