AD

குறளரசன் - நபீலா திருமண புகைப்படங்கள்...!!!!


இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்த குறளரசன், கடந்த பிப்ரவரி 16ம் தேதி தந்தை டி.ராஜேந்தர் முன்னிலையில் இஸ்லாம் மதத்துக்கு மாறினார். இத்திருமணத்துக்கு தமிழக முதல்வர் முதல் சினிமா பிரபலங்கள் மற்றும் பல்வேறு வி.ஐ.பி.களுக்கு பத்திரிக்கை வைத்த டி.ராஜேந்தர் அவருக்கு மிகவும் நெருக்கமான ஊடக நண்பர்கள் யாரையுமே அனுமதிக்கவில்லை.

யாரும் நபீலா அகமதுவை படம் எடுக்ககூடாது என கடுமையான கட்டுப்பாடு இருந்தால்!!!  குறளரசன் -நபீலா அகமது  காதல் திருமணம் மணமகளின் இல்லத்தில் நடந்தது. குறிப்பிட்ட நண்பர்கள், உறவுகள் மட்டுமே கலந்து கொண்ட இந்த எளிமையான திருமணத்தில் மதச்சடங்குகளில் கூட  மணமக்களின் பெற்றோர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். நெருங்கிய உறவுகள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.

திருமணத்துக்கு வந்த உறவினர்கள் யாரையுமே செல்ஃபோனில் படம் எடுக்க அனுமதிக்கவில்லையாம்..!!!! பத்திரிகையாளர்கள், குறிப்பாகப் புகைப்படக்கலைஞர்கள் யாரும் அழைக்கப்படாமல் நடந்த குறளரசன் - நபீலா அகமது திருமணம் தொடர்பாக ஒரே ஒரு புகைப்படம் மட்டும் மணமகள் வீட்டார் சார்பாக வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.


சீமானுடன் சிம்பு..!!!

சிம்புவுடன் கவுதம் கார்த்திக்..!!!



#simbu #kuralarasan #wedding #nabilaahmed #Tamilcinemaking #T.Rajendar