AD

பத்மவிருதுகள் பெற்ற நடிகர்கள்!






ஒவ்வொரு வருடமும் வெவ்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு, அவர்களை கௌரவிக்கும் விதமாக நாட்டின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்ம பூஷன்,பத்விபூஷண் போன்றவை இந்திய அரசால் வழங்கப்படுகிறது.  

இந்நிலையில், இந்த ஆண்டிற்கான விருது பெறுவோர் பட்டியல் ஜனவரி 25ம் தேதி வெளியிடப்பட்டது.  இதில் மொத்தமாக 109 பேர் இடம்பெற்றிருந்தனர். 


இதனை தொடர்ந்து, விருது வழங்கும் விழா இன்று டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்று வருகிறது.  

இதில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் மோகன்லாலுக்கு பத்மபூஷன் விருதும், நடிகர் பிரபுதேவா, டிரம்ஸ் சிவமணி, பாடகர் ஷங்கர் மகாதேவன், மனோஜ் பாஜ்பய், மறைந்த நடிகர் காதர்கான் போன்றோருக்கு பத்ம்ஸ்ரீ விருதை வழங்கினார். 

இந்நிகழ்வில், பிரதமர் மோடி, அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.  ஜனாதிபதியிடம் இருந்து பத்ம விருதுகளை பெற்ற திரைத்துறையின் அனைவரும் மகிழ்ச்சியுடன் கூடிய பெருமிதம் கொண்டனர்.