AD

ஓவியாவின் புதிய படங்களின் டிரைலர்கள்!!

நடிகை ஓவியா முக்கிய கதாபாத்திரத்தில்  நடித்த "கணேஷா மீண்டும் சந்திப்போம்" படத்தின் டிரைலர் இன்றும், நாளை நடிகர் ராகவா லாரன்ஸ் உடன் ஓவியா நடித்த "காஞ்சனா 3" திரைப்படத்தின் டிரைலரும் ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 'கணேஷா மீண்டும் சந்திப்போம்' படத்தின் பாடல்களும்  வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பாண்டியராஜன் மகன் பிரித்விராஜன், ஓவியா முக்கிய பாத்தித்திரத்தில்  நடித்த ''கணேஷா மீண்டும் சந்திப்போம்'' படத்தை ரத்தீஷ் எரேட் என்பவர் இயக்கியுள்ளார். சிபி இசையில், விபிந்த் ராஜ் ஒளிப்பதிவில் சாய் சுரேஷ் படத்தொகுப்பில் உருவான இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது. அதேபோல் ஓவியாவின் "காஞ்சனா 3"திரைப்படம் தமிழ்ப்புத்தாண்டு விருந்தாக வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


#Oviya #Raghava Lawrence #kanchana 3 #Tamilcinemaking