AD

மாரத்தான் ஓட்டத்தில் காஜல்

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் இந்தியன்-2 படத்தில் நடிக்க தயாராகிக் கொண்டிருக்கிறார் காஜல்அகர்வால். .

இந்த நிலையில், நேற்று மும்பையில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டப் பந்தயத்தில் காஜல் கலந்துகொண்டுள்ளார். 10 கிமீட்டர் தூரத்தை 70 நிமிடங்களில் தான் கடந்ததாகவும், கடந்த ஆண்டை விட 8 நிமிடங்கள் குறைவாக இந்த தூரத்தை தான் கடந்திருப்பதாகவும் அவர் தன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். 

அடுத்த ஆண்டு 21 கிலோ மீட்டர் தூரம் வரை தான் செல்ல திட்டமிட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


#mumbai, #Kajal_Aggarwal, #Shankar, #Kamal_Haasan