AD

பிரபல தொலைக்காட்சியுடன் இணையும் சிவகார்த்திகேயன்!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் "பேட்ட",  தளபதி விஜய் நடித்த "சர்கார்",  திரைப்படங்களை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் அடுத்த திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. சிவகார்த்திகேயன் நடிக்கும் "SK16" திரைப்படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்குகிறார். சிவகார்த்திகேயனை ‘மெரினா’ திரைப்படத்தின் மூலம் அறிமுக நாயகனாக பெரிய திரைக்கு அழைத்து வந்தவர்.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘Mr லோக்கல்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இது தவிர ‘இன்று நேற்று நாளை’ இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் SK14 திரைப்படமும், ‘இரும்புத்திரை’ இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் SK15 திரைப்படமும் சிவகார்த்திகேயன் கைவசம் உள்ளது.

#Sivakarthikeyan #Sun pictures #Pandiraj #SK16