AD

அது நான் இல்லை கதறும் ஜீலி


சென்னை எழும்பூர் மெட்ரோ ரயில் நிலைய கார் பார்க்கிங் பகுதியில், மஃப்ட்டியில் இருந்த காவலருடன் ஜூலியின் ஆண் நண்பர் ரஜிதிப்ரான் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ன் தாக்கியதாகவும், காவலர் அளித்த புகாரின் பெயரில் அவரை கைது செய்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

இது குறித்து நடிகை ஜூலி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், தன்னை பற்றியும், தனது நண்பர் குறித்தும் பரவிய தகவலில் சிறிதும் உண்மையில்லை. ஆதரமற்ற செய்திகளை
பரப்பி வருகிறார்கள். இந்த சம்பவத்தின் போது அந்த இடத்தில் நான் இல்லவே இல்லை, ஆனால் நான் இருந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

 இது பற்றி  தகவல் வெளியிட்ட  ஊடகத்திடம் தகவல் தெரிவித்த பின், அவர்களும் அதனை நீக்கிவிட்டனர். இருந்தபோதிலும், தன்னை பற்றி ஆபாசமாகவும், அவதூறாகவும் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும்
கமெண்ட்களால் அவர் மன உளைச்சலுக்கு ஆளாவதாக ஜூலி தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 2 சீசன் முடிந்துவிட்டது, இப்போதும் தன்னை குறிவைத்து மட்டம்தட்டுவதில் என்ன கிடைக்கப்போகிறது. பொய் தானே சொன்னேன். யாருமே உலகத்தில் பொய் கூறுவதில்லையா? பொய்யே
சொல்லாத ஒருவர் என்னை பற்றி கமெண்ட் செய்யட்டும் என்றும் ஆக்கிரோசமாக அந்த வீடியோ பதிவில் கூறியுள்ளார்.