AD

ஏ.ஆர். ரஹ்மானை கவர்ந்த பிரபல நடிகரின் டீஸர்


அண்மையில்  விக்ரம் பிரபு ஹீரோவாக நடித்துள்ள “அசுரகுரு” படத்தின் டீசர் வெளியானது. இப் படத்தில் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக மஹிமா நம்பியார் நடித்துள்ளார். ஜேஎஸ்பி பிலிம் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் ஜேஎஸ்பி சதீஷ்  இப் படத்தை தயாரித்துள்ளார்.
மேலும் யோகிபாபு, ஜெகன், குமரவேல், மனோபாலா ஆகியோர் முக்கியவேடங்களில் நடித்துள்ளனர்.  கணேஷ் ராகவேந்திரா இசையமைத்துள்ள இந்த படத்துக்கு கபிலன் வைரமுத்து, பழனிபாரதி பாடல்கள் எழுதியுள்ளனர்.

இந்நிலையில் அசுரகுரு படத்தின் டீசரை பார்த்த ஏ.ஆர். ரஹ்மான், அப்  படக்குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ளார்.  இதனால் அசுரகுரு படக்குழுவினர் மிகுந்த மகிழ்சியில் ஆழ்ந்துள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் சென்னை, உடுமலைப்பேட்டை, ஹைதராபாத்  போன்ற பகுதிகளில் நடைபெற்றது.  மேலும் விரைவில் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.