AD

ரஜனிகாந்தின் திடீர் அரசியல் அறிவிப்பு - அறிக்கை உள்ளே


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேட்ட படத்தை அடுத்து முருகதாஸின் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது.  அத்தோடு அரசியலுக்கு வருவதை அறிவித்ததோடு அடுத்ததாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
இதனால் அவரது ரசிகர்கள் அவர் எப்போது அரசியலில் இறங்கபோகிறார் என பெரிதும் எதிர்பார்த்துவருகின்றனர். வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில்  ஒரு அறிக்கையை ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார்.அதில் அவர் வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை , எந்த கட்சிக்கும் ஆதரவாகவும் இருக்க போவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனால் ரஜினி மக்கள் மன்றத்தின் பெயரையோ கொடியையோ யாரும் பயன்படுத்த கூடாது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தமிழக சட்டமன்ற தேர்தல் தான் தனது இலக்கு என்றும் அதில் தெரிவித்துள்ள அவர்.வரும் பாராளுமன்ற தேர்தலில் யார் தண்ணீர் பிரச்சனையை தீர்க்கும் நல்ல திட்டங்களை கொண்டு வருவார்கள் என ஆராய்ந்து வாக்களியுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டை சேர்ந்த ரஜினி மக்கள் இருந்து 20 ஆயிரம் விலகியதோடு, திமுகவில் இணைந்துள்ளனராம். இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.