AD

சௌந்தர்யா ரஜினிகாந்த் வாழ்வின் முக்கிய ஆண்கள் யார் தெரியுமா?


சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யாவிற்கு இரண்டாவது திருமணம் இன்று நடந்து முடிந்தது. இவர் அஸ்வின் என்ற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் எதொ மன கசப்பு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டார்கள். அஸ்வின் சில மாதங்களுக்கு முன்னே வேறு பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.

ஆனால் மகனை வளர்ந்துவந்த சௌந்தர்யா தற்போது இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். நடிகரும், தொழிலதிபருமான விசாகன் என்பவரை தான் இன்று திருமணம் செய்தார் சௌந்தர்யா. திருமணம் செய்த உடனே அவருக்கு ட்விட்டரில் வாழ்த்து கூறிய எ. ஆர். ரஹ்மானுக்கு நன்றி தெரிவித்ததோடு, மூன்று புகைப்படத்தை பகிர்ந்து எனது வாழ்வில் முக்கிய ஆண்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.


அந்த புகைப்படங்களில், தந்தை ரஜினி, மகன் மற்றும் கணவர் விசாகன் இருக்கிறார்கள். இவரது வாழ்கை நினைத்த படி அமைய அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள் நீங்களும் உங்களின் வாழ்த்தை கீழ் உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவு செய்யலாம்.