AD

சின்னத்திரையை விட்டு விலகும் வாணி போஜன்!!

சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்களை கவர்ந்தவர், நடிகை வாணி போஜன். இவர் தற்போது வேறு சீரியல்களில் நடிக்காமல் ஒதுங்கி உள்ளார்.

இந்நிலையில் அவர் சினிமாவில் நடிக்க துவங்கியுள்ளதாக முன்பே செய்திகள் வெளியானது. இந்நிலையில் அவர்  தற்போது அளித்த பேட்டியில், இனி சீரியல்களில் நடிக்க போவதில்லை என அறிவித்துள்ளார். அதே நேரம் கொஞ்ச நாள் சின்னதிரைக்கு ஓய்வு கொடுப்போம் என முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தெய்வமகள் சீரியலுக்குப் பின் ஒவ்வொரு வீட்டிலும் என்னை அவங்க பெண்ணா பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. சினிமா பற்றியத் தெளிவு தற்போது கிடைத்துள்ளது. அதனால் தற்போது தமிழ்  படங்களில் நடிப்பது பற்றி ஜோசித்து வருகிறேன் என்றார்.

#Vani  #Bhojan  #TamilCinema #Chinnathirai #Tamilcinemaking