AD

அரசியல்வாதியாக அவதாரம் எடுத்த மக்கள் செல்வன்!!

நடிகர்கள் தனுஷ், சிம்பு, சூர்யாவிற்கு அடுத்தாக நடிகர் விஜய்சேதுபதியும் அரசியலில் குதிக்க உள்ளார்.  சமீப காலமாக தமிழ் சினிமாவில் அரசியலை பற்றி நிறைய திரைப்படங்கள் வந்து கொண்டு இருக்கிறது. குறிப்பாக சொல்ல போனால் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் ஜெ.ஜெலலிதா இறந்ததுக்கு பிறகு நிறைய அரசியல் படங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றது.

தற்பொழுது விஜய்சேதுபதியும் அரசியல்வாதியாக மாறி "துக்ளக்" என்ற படத்தில் நடிக்கவுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற "96" படத்தின் 100 வது நாள் விழாவில் விஜய்சேதுபதியே  "துக்ளக்" படத்தில் நடிப்பது பற்றி கூறியுள்ளார். இந்த படத்தை டெல்லி பிரசாந்த் தயாரிக்கயுள்ளார்.