அனுஷ்கா- பிரபாஸ் மீண்டும் காதலா!!

சில வாரங்களாக பிரபாஸ், அனுஷ்கா பற்றிய கிசுகிசுக்கள் ஓய்ந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் களைகட்டத் தொடங்கி உள்ளது. வெளிநாடுகளில் தமிழ், தெலுங்கு படங்களுக்கு வரவேற்பு உள்ளது. குறிப்பாக ஜப்பானில் ரஜினி காந்த் படங்களுக்கு தனி மவுசு உள்ளது. பாகுபலி படத்துக்கு பிறகு பிரபாஸ், அனுஷ்காவுக்கும் ஜப்பான் ரசிகர்களிடையே வரவேற்பு அதிகரித்திருக்கிறது.

இதையடுத்து இருவரும் ஜோடி சேர்ந்து நடித்த "மிர்ச்சி" திரை படத்தை ஜப்பானில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கிறது. இப்படம் கடந்த 2013ம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. ஆறு வருடங்களுக்கு கழித்து ஜப்பானில் வெளியாகிறது. இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஜப்பானில் நடத்த ஏற்பாடு செய்யப்படுகிறது. அதில் பங்கேற்க பிரபாஸ், அனுஷ்கா ஜோடியாக ஜப்பான் செல்ல உள்ளார்கள்.
#AnushkaShetty #Suriya
Post a Comment