மூச்சு திணற, திணற டப்பிங் பேசிய விஜய் சேதுபதி - 'ஒரு நாள்... ஒரு ஆள்...' வைரலாகும் வீடியோ
சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக விஜய் சேதுபதி பேசிய டப்பிங் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதில் மூச்சு விடாமல் பேசும் காட்சி பார்வையாளர்களை ஆச்சரியத்தில் உறைய வைக்கிறது
‘ஆரண்ய காண்டம்‘ படத்துக்குப் பிறகு தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘சூப்பர் டீலக்ஸ்’.
இந்தப் படத்தில் விஜய் சேதுபதி திருநங்கை வேடத்தில் நடித்துள்ளதால், ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இவருடன் பகத் பாசில், சமந்தா, மிஷ்கின் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இப்படத்தின் இரண்டாவது லுக், கடந்த வியாழன் அன்று வெளியானது. வரும் மார்ச் 29ஆம் தேதி படம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதன் டிரைலர் கடந்த 22ஆம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
இதில் ஒரு நாள்... ஒரு ஆள்... என்று நீண்ட வசனம் ஒன்றை விஜய் சேதுபதி பேசியிருப்பார். இந்நிலையில் ’சூப்பர் டீலக்ஸ்’ படத்திற்காக விஜய் சேதுபதி பேசிய அவ் வசனத்தின் டப்பிங் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
மூச்சு விடாமல் பேச முயற்சிக்கும் விஜய் சேதுபதி, இறுதியில் அனைவரையும் ஆச்சரியத்தில் உறைய வைத்து விடுகிறார்.
Oru naal..— tylerdurdenandkinofist (@tylerdurdenand1) February 24, 2019
Oru aal..
Dubbing theatre pakkam thaniyaa pogaiyila..#SuperDeluxe #SuperDeluxeFromMarch29 @VijaySethuOffl @Samanthaprabhu2 @thisisysr @sash041075 @itisthatis @ynotxworld @alchemyvisionw1 @onlynikil @SGayathrie @meramyakrishnan @gopiprasannaahttps://t.co/b0B0Ar5au0 pic.twitter.com/tD277mfkyE
Post a Comment