நடிகர் அஜித்துடன் இணையும் மயிலின் மகள்!!
நடிகர் அஜித்‘விஸ்வாசம்’ படத்தை அடுத்து தனது "59"வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்தப் படத்தை எச்.வினோத் இயக்கவுள்ளார். தமிழில் உருவாகவுள்ள இந்தப் படம் முதலில் அமிதாப்பச்சன் நடிப்பில் இந்தியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘பிங்க்’ படத்தின் ரீமேக்காகும்.
இந்தியில் அமிதாப்பச்சன் நடித்த கேரக்டரில் நடிகர் அஜித்தும், நடிகை டாப்ஸி நடித்த கேரக்டரில் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாதும் நடிக்கிறார்கள். மேலும் நடிகை வித்யா பாலன் அஜித்தின் மனைவியாக நடிக்கிறார் என்பது அறிந்த விஷயமே.
இந்நிலையில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் அஜித்தின் 59வது படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் அஜித் படத்தில் நடித்தால் ஜான்விக்கு தமிழில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நினைத்து தன் மகளை நடிக்கவைக்கவுள்ளார் தயாரிப்பாளர் போனி கபூர்.

Post a Comment