AD

கமல்ஹாசனுக்கு ஜோடியாக 180 பேரின் நிராகரிப்பிற்கு பின்னர் தெரிவு செய்யப்பட்ட நடிகை.


தமிழ் சினிமா உலகில் தனது நடிப்பின் திறமையால் சிகரம் தொட்டவர் நடிகர் கமல்ஹாசன். உலகநாயகன் என  தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மட்டுமல்ல சினிமாத்துறையை சேர்ந்த பலராலும் அழைக்கப்படுபவர் நடிகர்  கமல்ஹாசன். தமிழ் படங்களில் புதிய தொழில்நுட்பத்தை கொண்டு வந்த பெருமை இவரையே சேரும். தற்போது மக்கள் நீதி மையம் என கட்சி தொடங்கி அரசியலில் தீவிரமாக இறங்கிவிட்டார்.

அதே வேளையில்  கமல்ஹாசனின் இந்தியன் 2, தேவர் மகன் 2 படங்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியன் 2, ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் மாறுபட்ட இரு வேடங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த படத்தில் காஜல் அகர்வால் நாயகியாகவும், கமல்ஹாசன் நடித்து வரும் சேனாதிபதி கேரக்டரின் பேரனாக சித்தார்த் நடிக்கவிருப்பதாகவும், மற்றொரு முக்கிய கேரக்டரில் டெல்லி கணேஷ் நடிப்பதாகவும் வெளிவந்த செய்திகளை ஏற்கனவே பார்த்தோம். 



கமல்ஹாசனை உயரத்தை அடைய வைத்த பெருமையில் இயக்குனர் பாலசந்தருக்கும் முக்கிய பங்குண்டு. அன்று பாலசந்தர் இயக்கத்தில் வெளி வந்த மரோ சரித்திரா படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிக்க ஹீரோயினுக்கான தேர்வு நடந்ததாம். இதில் 180 பேர் நிராகரிகப்பட்டு கடைசியில் சரிதாவை தான் தேர்ந்தெடுத்தார்களாம். இதுகுறித்து அண்மையில் ஹைதராபாத் வந்துள்ள நடிகை சரிதா கூறியுள்ளார்.